Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதைப் புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும். அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
ஆரோக்கியமான உணவுகள்: உடலில் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த, முதலில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க வேண்டும். மாறாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை பழம்: உடலில் இருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த, நீங்கள் அதிக வைட்டமின் சி அதாவது எலுமிச்சை உட்கொள்ள வேண்டும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
ஆளி விதை: அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த ஆளி விதையை உட்கொள்ளலாம். இவை உடல் எடையை குறைப்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
வெந்தய விதை: வெந்தய விதையும் இந்தப் பட்டியலில் வருகின்றன. அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் திறன் வெந்தய விதைக்கு உண்டு. இதன் மருத்துவ குணங்கள் எடை இழப்பு முதல் நீரிழிவு நோய் வரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீரை: கீரை அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கீரையில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.