Cheap Home Loan: குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்; எந்த வங்கியில் எவ்வளவு

ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாக ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. ஆனால் இப்போது இந்த விகிதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடர்ந்து 2 முறை 4.9% ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதும் விலை உயர்ந்ததாக ஆனது. ஆனால் இன்னுமும் சில வங்கிகளில் 7% வீதத்திற்கும் குறைவாக வீட்டுக் கடன் வட்டியை தருகிறது. அந்த வகையில் நாம் இன்று 7% வரையிலான வட்டியை வழங்கும் வங்கிகள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

1 /4

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6.9% பிலோட்டிங் விகிதத்தில் கடன் பெறலாம். செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 0.5% ஆகும்.

2 /4

ஆக்ஸிஸ் வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 6.9% முதல் ஆரம்பமாகிறது. செயலாக்க கட்டணம் 0.5% ஆக இருக்கும்.

3 /4

IDFC வங்கியில் இருந்து வருடத்திற்கு 6.5% என்ற விகிதத்தில் கடன் பெறலாம். 5 ஆயிரம் ரூபாய் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரிகளும் இங்கு செலுத்தப்படும்.

4 /4

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வட்டி விகிதம் 6.9% முதல் ஆரம்பமாகிறது. 30 வருட காலத்திற்கு, BOB-ல் இருந்து ₹ 1 லட்சம் முதல் ₹ 10 கோடி வரை கடன் பெறலாம்.