Bank fixed deposits : பொதுவாக, வழக்கமான சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும் போது FDகள் அதிக வட்டியை பெற்றுத் தருகின்றன. குறைந்த அபாயத்துடன் தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வங்கியின் நிலையான வைப்புத்தொகை திட்டம் பிடித்தமானது.
Bank FD Interest: அபாயம் குறைவாக இருப்பதால் எஃப்டியில் பணத்தை சேமித்தாலும், எந்த வட்டி எவ்வளவு வட்டி தருகிறது என்பதைப் பார்த்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்...
டெர்ம் டெபாசிட் அல்லது டைம் டெபாசிட்கள் என்றும் நிலையான வைப்புத்தொகை அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் மொத்த தொகையை டெபாசிட் செய்வதற்கு அந்த வங்கி கொடுக்கும் நிலையான வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் மக்கள் அந்த வங்கியில் அதிக பணத்தை டெபாசிட் செய்வார்கள்
ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை 7.25% என்ற விகிதத்தில் வட்டியை வழங்குகிறது
எஸ்பிஐ தனது 400 நாட்கள் வைப்புத்தொகை திட்டத்திற்கு 7.10% வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு அம்ரித் கலஷ் என்று பெயர்
பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு 400 நாட்கள் டெபாசிட்களுக்கு 7.25% வட்டி கொடுக்கிறது
பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டிற்கு 7.25% வட்டி வழங்குகிறது
ஐசிஐசிஐ வங்கி15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.20% வட்டி வழங்குகிறது
17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு ஆக்சிஸ் வங்கி 7.20% வட்டி வழங்குகிறது
கனரா வங்கி, 444 நாட்களுக்கு 7.25% என்ற வட்டி விகிதத்தில் டெபாசிட்களை பெற்றுக் கொள்கிறது