குழந்தைகள் பொய் பேசினால் பெற்றோர்கள் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா !

அதிகமான குழந்தைகள் பெற்றோர்களிடம் பொய் பேசுவது தற்காலத்தில் அதிகமாகி விட்டன. மேலும் பெற்றோர்களின் கவனக்குறைவு குழந்தைகளை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு முற்றிலும் தலைகீழாக மாறிவிடும். பொய் பேசுவது தவறு என்று குழந்தைகளுக்குத் தன்மையாக எடுத்துரைப்பது பெற்றோர்களின் கடமை.

குழந்தைகள் பொய் பேசும் நேரத்தில் பெற்றோர்கள் வன்மையாகக் கண்டிக்கவோ அல்லது அடிப்பதோ கூடாது. இது அவர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் உங்கள் குழந்தைகளை எவ்வாறு நீங்கள் பொய் பேசும் நேரத்தில் கையாள வேண்டும் என்று சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தெரிந்து கொண்டு இனி உங்கள் குழந்தைகள் பொய் பேசினால் இதுபோன்று அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

1 /8

அமைதி மற்றும் பொறுமை: குழந்தைகள் பெற்றோர்களிடம் சில பொய்கள் பேசும் போது பெற்றோர்கள் உடனடியாக கோபப்படக்கூடாது. அமைதியாகவும், பொறுமையாகவும் அவர்கள் சொல்லும் கருத்தை காதில் கேட்க வேண்டும்.

2 /8

கேள்வி: குழந்தைகள் எதற்காக உங்களிடம் பொய் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

3 /8

பெற்றோர்களின் எடுத்துக்காட்டு: பெற்றோர்கள் சில நேரம் குழந்தைகளிடம் பொய் பேசுவதைக் குழந்தைகள் அதனைப் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் பொய் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4 /8

தண்டிப்பு: அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் பொய் பேசினால் உடனடியாக அடிப்பது அல்லது திட்டுவது, கடுமையான சொற்களை வைத்து அவர்களைக் காயப்படுத்துவது இது போன்ற செயல்கள் செய்கின்றனர். எனவே குழந்தைகள் இதனால் மிகவும் மன அழுத்தத்தில் ஆளாகின்றனர்.

5 /8

உரையாடல்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகினால் குழந்தைகள் பெற்றோர்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள்.

6 /8

பாராட்டு: குழந்தைகள் ஏதேனும் ஒரு செயலை நேர்மையாகச் செய்தால் பெற்றோர்கள் அதனைப் பாராட்ட வேண்டும். இது குழந்தைகளை ஊக்கப்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கிறது.

7 /8

சிக்கல்: அதிகமான குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மனக்கசப்புகள் அல்லது சிக்கல்கள் அதனை வெளிப்படுத்த முடியாமல் பொய் பேசுகின்றனர். எனவே அவர்களிடம் இருக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து அதனைச் சுமுகமாகச் சரி செய்ய வேண்டும்.

8 /8

கவனம்: பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி பொய் பேச மாட்டார்கள். மேலும் சில நேரத்தில் மட்டுமே பொய் பேச மாட்டார்கள். அடிக்கடி குழந்தைகள் பொய் பேசினால் உடனடியாக பெற்றோர்கள் குழந்தைகளைத் தன்மையாகக் கண்டித்துப் பொய் பேசினால் என்ன நடக்கும் என்று தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.