நாம் சத்தான உணவுப்பொருட்கள் என்று நம்பி சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் உண்மையாகவே நமக்கு ஆரோக்கியத்தை தருவது இல்லை.
தயிர் உடலுக்கு நல்லது தான், ஆனால் மனமூட்டப்பட்ட சில தயிர்கள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. அவ்வாறு செயற்கை சுவையூட்டப்பட்ட தயிர்கள் அதிக இனிப்புசுவையை கொண்டிருக்கின்றன.
கடைகளில் விற்கப்படும் புரோட்டின் பானங்கள் நமது உடலுக்கு வலு சேர்க்கும் என நினைத்து வாங்கி பருகுகிறோம். ஆனால் அவற்றிலெல்லாம் செயற்கையான நிறமிகள் தான் சேர்க்கப்பட்டு இருக்கின்றன, இது உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது.
சாலட் வகைகள் உடலுக்கு நல்லது தான், ஆனால் பேக்கிங் செய்யப்பட்ட சாலட்கள் ஆபத்தை ஏற்படுத்தும். பேக்கிங் செய்யப்பட்ட சாலட்களில் அதிகளவு சோடியம் மற்றும் கொழுப்புகள் உள்ளன.
கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களை நாம் ஆரோக்கியமானது என நினைத்து பயன்படுத்துகிறோம். உண்மையில் அவை இதயத்திற்கு நல்லதல்ல, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து உடலை பாதிக்கிறது.
கொழுப்பு-நீக்கப்பட்ட உணவுகள் என கடைகளில் விற்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும், அதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டு இருக்கும், இது உடலை பாதிக்கிறது.