பெரும்பாலான மக்கள் இஞ்சியை பயன்படுத்தும் போது, அதன் தோலை நீக்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிசய மூலிகை எனக் அழைக்கப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்காமல் பயன்படுத்த வேண்டும் என ஹார்வெர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஞ்சித் தோலை நீக்காமல் பயன்படுத்தினால் தான் அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் உள்ளன. அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
டீயில் இஞ்சி சேர்க்கும் போதும், இஞ்சி டீ தயாரிக்கும் போதும், இஞ்சியை தோலை நீக்காமல் சேர்த்துக் கொண்டு அதன் முழும் பலனை பெறவும்
இஞ்சியில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
இஞ்சியை உட்கொள்வது மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.மேலும் இஞ்சி சேர்த்துக் கொள்வதால், வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது
சிலருக்கு இஞ்சி தோலின் சுவை பிடிக்காமல் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், இஞ்சியின் தோலை அகற்ற கத்திக்கு பதிலாக மெல்லிய பீலரால் தோலை நீக்க வேண்டும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)