Hardik Pandya Net Worth: ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Hardik Pandya's Net Worth: அதிக வருமானம் பெரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளார். அவரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 

1 /7

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் முக்கியமான வீரராக உள்ளார். வரும் காலத்தில் அனைத்து வடிவத்திலும் கேப்டனாகும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.   

2 /7

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடரில் இருந்து ஹர்திக் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளார். ஹர்திக் பாண்டியாவின் தோற்றம், ஸ்டைல் ​​என அனைத்தும் சமீபத்தில் கிண்டலுக்கு உள்ளானது.    

3 /7

ஹர்திக்கின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.91 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் மூலம் வரும் வருமானத்தை தவிர விளம்பரம் மற்றும் பிராண்ட் புரமோஷன் மூலமும் நல்ல தொகையை பெறுகிறார்.  

4 /7

பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஹர்திக் கிரேடு-ஏவில் இடம் பெற்று ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும் ஐபிஎல் மூலமாக இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறார்.   

5 /7

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சமயத்தில் அவருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. சிறிய குடும்பத்தில் இருந்து வந்த ஹர்திக் தற்போது ஆடம்பரமான வீடுகள் மற்றும் கார்கள் வைத்துள்ளார்.  

6 /7

மும்பை பாந்த்ராவில் 30 கோடி மதிப்புள்ள வீடு ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது. மேலும் பல சொகுசு கார்களும் வைத்துள்ளார்.   

7 /7

ஆடி ஏ6, ரேஞ்ச் ரோவர் வோக், ஜீப் காம்பஸ், மெர்சிடிஸ் ஜி வேகன், ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி ஹுராகன் ஈபிஓ, போர்ஸ் கேயென் போன்ற சொகுசு கார்களை ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார்.