Happy Birthday Dhanush...மறக்கவே முடியாத தனுஷின் இந்த தமிழ் படங்கள்..!

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். 

  • Jul 28, 2020, 13:09 PM IST

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். 

 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

தனுஷ் தனது உண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.இவர் ஏழு முறை ஃபிலிம் ஃபேர் விருது வென்றுள்ளார்.

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். 

1 /12

துள்ளுவதோ இளமை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும்.

2 /12

காதல் கொண்டேன் படம், 2003 இல் வெளிவந்தது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.

3 /12

படிக்காதவன்  தமிழில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்கினார். இதில் தனுஷ், தமன்னா, விவேக், சாயாஜி சிண்டே, பிரதாப் போத்தன், சுமன் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்

4 /12

ஆடுகளம்  வெற்றிமாறனின் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்சி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்று தங்கத்தாமரை விருதும், அவருக்கே சிறந்த திரைகதைக்கான விருதும் நடன இயக்குநர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குநர் விருதும் கிடைத்துள்ளது.

5 /12

3 திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பாடல் 'வொய் திஸ் கொலவெறி டி' இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

6 /12

மரியான் படம் வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதே இத்திரைப்படம் ஆகும்.

7 /12

வேலையில்லா பட்டதாரி எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர். இது தனுஷின் 25ஆம் படமாகும். 

8 /12

மாரி அதிரடி நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலாசி மோகன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.

9 /12

வட சென்னை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்

10 /12

அசுரன் படம்  வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார். தனுஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

11 /12

எனை நோக்கி பாயும் தோட்டா காதல் திகில் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கௌதம் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ம.சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். 

12 /12

பட்டாஸ் திரைப்படம் தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது ஆர். எஸ். துரை செந்தில் குமார் என்பவரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவீன் சந்திரா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.