மழைக்காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது முக்கியம். எண்ணெய் தடவினால் கூந்தலுக்கு ஈரப்பதமும், பளபளப்பும் கிடைக்கும்.
மழைக்காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது முக்கியம். எண்ணெய் தடவினால் கூந்தலுக்கு ஈரப்பதமும், பளபளப்பும் கிடைக்கும். உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முடி உதிர்வையும் குறைக்கிறது.
தேங்காய் எண்ணெயைத் தடவுவதால் முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். தேங்காய் எண்ணெயைத் தடவுவது முடியின் முனை பிளவுடுவதையும் உடைவதையும் தடுக்கிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்ட உதவுகிறது.
கற்றாழை எண்ணெயைப் பயன்படுத்துவதால் முடி வலுவடையும். கற்றாழை எண்ணெய் உச்சந்தலையில் ஏற்படும் அலர்ஜி, பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றுக்கும் சிறந்தது.
வெங்காயம் கொண்ட ஹேர் ஆயிலைப் பயன்படுத்துவது முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த முடி எண்ணெயில் சல்பர், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
வேப்ப எண்ணெய் முடி வளர்ச்சிக்கு சிறந்தது. வேப்ப எண்ணெய் முடியை கருப்பாக்குவதற்கும் நல்லது. வேப்ப எண்ணெய் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேயிலை மர எண்ணெய் தோல், முடி மற்றும் நக ஆரோக்கியம் உட்பட பல நன்மைகளை கொண்டுள்ளது. தேயிலை மர எண்ணெய் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை அழிப்பதன் மூலம் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்தது.