கடவுள்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் நவம்பர் 24-ம் தேதி வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், இதனால், அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் அதன் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அது 12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது.
குரு பகவான் கடந்த ஜூலை 29 அன்று மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆனார். இப்போது நவம்பர் 24ஆம் தேதி இந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 1 வருடம் ஆகும். குரு பகவான் என்னும் வியாழன் கிரகம் செல்வம், பெருமை, கல்வி, குழந்தைகள், ஆன்மீகம், திருமணம், மரியாதை மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த மாதம் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் வெகுவாக கை கொடுக்கும். பண வரவு மகிழ்ச்சியைக் கொண்டு வரும். அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்து வேலைகளும் முடிவடையும். வருமானம் அதிகமாக இருக்கும். செலவுகள் குறையும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலை தேடுபவர்கள், வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக இருக்கும். ஊடகம், சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். இந்த ராசி மாணவர்களுக்கு பலன்கள் மிக சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் துறையில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். இதன் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். நவம்பரில் இந்த ராசி மாற்றம் தொழிலதிபர்களுக்கு நன்மை தரும். வீடு வாங்கும் கனவு நனவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)