குரு உதயத்தால் உருவான ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட மகிழ்ச்சி!!

Guru Uday 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாறும்போதும், இயக்கங்கள் மாறும்போதும், அவை அஸ்தமனமாகி உதயமாகும் போதும், அவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது.  

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் உதயமானார். மேஷ ராசியில் குரு உதயமானதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஹன்ஸ் ராஜயோகம் உருவானதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

 

1 /7

ஹன்ஸ் ராஜயோகம் எப்படி உருவாகிறது? வேத ஜோதிடத்தில், ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் உச்சமாகி, இங்கிருந்து சந்திரன் முதல், நான்காவது, ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டில் கடகம், தனுசு அல்லது மீனம் ஆகியவற்றில் இருக்கும்போது, ​​​​ஹன்ஸ் ராஜ் யோகத்தின் மங்களகரமான யோகம் உருவாகிறது. 

2 /7

இந்த வகையான ராஜயோகத்தால் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு வெற்றி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதை ஆகிய நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /7

மேஷம்: பல விதமான சுப பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகள் உங்கள் பணியைப் பாராட்டுவார்கள். பெரிய பண ஆதாயமும் கிடைக்கக்கூடும்.

4 /7

கடகம்: ஹன்ஸ்ராஜ யோகம், கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

5 /7

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் மிகவும் சாதகமாக உள்ளது. பணியிடத்தில் திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகமாவதால் நிம்மதி கிடைக்கும். ஹன்ஸ்ராஜ யோகம் உங்கள் நிதி நிலையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும். 

6 /7

மீனம்: ஹன்ஸ்ராஜ யோகம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் தொடரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் பிற துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைக்கும். 

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.