சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும், பொற்காலம் ஆரம்பம்

Sani Nakchatra Peyarchi Palangal: கர்மவினை அளிப்பவர் சனி பகவான் இன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். இது 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். 

Shani Nakshatra Peyarchi April 2024 : அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி ஆவார். அதன்படி சனி இன்று குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகுகிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /8

சனி நட்சத்திர பெயர்ச்சி: பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். எனவே இன்று மாலை சுமார் 03:55 மணிக்கு சனி நட்சத்திர மாற்றம் ஏற்படும்.

2 /8

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றத்தால் பெரும் பலன்களைப் பெறுவார்கள். செல்வம் பெருகும். பொருளாதார நிலை மேம்படும். பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும்.  

3 /8

கன்னி: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வரும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பல பொன்னான வாய்ப்புகளை பெறலாம்.   

4 /8

விருச்சிகம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். சாதகமான பல நன்மைகள் நடக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். சொந்த தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். சனியின் அருளால் நிதி ஆதாயம் கூடும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.   

5 /8

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் கிடைக்கும். வேலைகள் தடையின்றி நடைபெறும். எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பொருளாதார லாபம் கிடைக்கும். நிதியுதவி பெறுவீர்கள். காதல் உறவு இனிமையாக இருக்கும்.  

6 /8

மகரம்: சனியின் நட்சத்திர மாற்றத்தால் நிதி ஆதாயத்தை தரும். பல வாய்ப்புகளைப் பெறலாம். நிலம், வாகனம் வாங்கலாம். வியாபாரத்தில் விரிவடையும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.   

7 /8

கும்பம்: சனி நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு லாம்பத்தை தரும். இந்த மாற்றத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக பொருளாதார பிரச்சனைகள் தீரும். தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.