ஜியோவின் புத்தாண்டு பரிசு... 60ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா - அசரவைக்கும் கூடுதல் பலன்கள்!

Jio New Year Offer: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த புத்தாண்டில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தின் வேலிட்டியை நீட்டித்துள்ளது. அதன்மூலம், கூடுதல் டேட்டாவை பயனர்கள் பெறுவார்கள். அந்த திட்டம் குறித்து இதில் காணலாம்.  

  • Dec 24, 2023, 18:51 PM IST

 

 

 

1 /7

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் புத்தாண்டை முன்னிட்டு ஒரு அதிரடி சலுகையை வழங்கி உள்ளது. ஜியோ நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களின் வேலிடிட்டியை நீட்டித்து சலுகையை வழங்கியிருந்தாலும், வரும் நாள்களில் அது மற்ற திட்டங்களுக்கு அறிவிக்கப்படலாம்.  

2 /7

ஜியோவின் இந்த சலுகை குறித்த அனைத்து தகவல்களையும் இதில் காணலாம். மேலும், இது ஜியோ புதிய திட்டம் இல்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டத்தில் சலுகையை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  

3 /7

அதாவது, ஜியோவின் 2999 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ 2,999 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 'புத்தாண்டு 2024 ஆஃப்பர்'-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 2 ஆயிரத்து 999 ரூபாய் திட்டம் நிறுவனத்தின் நீண்ட கால வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டமாகும்.  

4 /7

இந்த திட்டத்தில், பயனர்கள் 365 நாட்கள் வரை வேலிடிட்டியை பெறுவார்கள். அந்த வகையில், புத்தாண்டின் சிறப்பு சலுகையின் கீழ், பயனர்கள் 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை பெறுகிறார்கள்.   

5 /7

அதாவது இந்த திட்டம் 1 வருடத்திற்கு பிறகும் கூடுதலாக 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் 389 நாள்களுக்கு இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

6 /7

இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 365 நாட்களின் வேலிடிட்டியின்படி, இந்த திட்டம் 912.5 ஜிபி டேட்டாவை பெறுவார்கள், தற்போது இதிலும் கூடுதல் டேட்டாவை பெறலாம். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற காலிங் வசதியும் உள்ளது.  

7 /7

JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தாவும் இதில் அடங்கும். ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஜியோ ஆப் மூலம் இந்த புதிய திட்டத்தின் பலனை நீங்கள் பெறலாம்.