இதையும் விடாத அம்பானி... ஜியா சினிமாவின் அடுத்தடுத்த இலவசங்கள்!

Jio Cinema: ஐபிஎல் 2023 சீசனை முழுமையாக இலவசமாகவே ஒளிப்பரப்பியதன் மூலம் இந்தியாவில் பெரும் சந்தையை பிடித்துள்ளதாக கூறப்படும் ஜியோ சினிமா தற்போது மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மிரட்டியுள்ளது. 

 

 

 

 

1 /7

Jio Cinema IND vs WI: ஜியோ சினிமாவில் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் ஒரு மாத காலம் நடக்க உள்ள இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளின் போட்டி ஒளிபரப்ப உள்ளது.

2 /7

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஜூலை 12ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் ஜூலை 12-16 முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-24 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 100வது டெஸ்ட் போட்டியாகும்.  

3 /7

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இதையடுத்து நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் முறையே இப்போட்டிகள் நடைபெற உள்ளன.   

4 /7

ஜியோ சினிமா, ஐபிஎல் 2023 தொடரை இலவசமாக ஒளிப்பரப்பியது. 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து ஜியோ சினிமா கைப்பற்றியது. 

5 /7

ஜியா சினிமா ஐபிஎல் உரிமையை ரூ. 951 கோடி கொடுத்து வாங்கியது. மேலும், ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதால் அதிக பார்வையாளர்களை அது பெற்றது. இது ஹாட்ஸ்டாருக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கியது. 

6 /7

ஜியோ சினிமா கணக்கீட்டின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டியை ஒரே நேரத்தில் 3.21 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

7 /7

ஜியோ சினிமாவின் இந்த அசூர வளர்ச்சியை அடுத்து, அதற்கு போட்டியாக ஹாட்ஸ்டாரும் ஒரு பெரும் அறிவிப்பை வெளியிட்டது. இந்தாண்டுகளில் அடுத்தடுத்து நடத்தப்படும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களை இலவசமாக ஒளிப்பரப்ப டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடிவெடுத்தது.