இன்று சூரியனின் ராசி மாற்றம்: அமோகமாக இருக்கப்போகும் ராசிகள் இவைதான்

Sun Transit: கிரகங்களின் அரசனான சூரியன் இன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். செப்டம்பர் 17 வரை சூரியன் இந்த ராசியில் நீடிப்பார். அதன் பிறகு கன்னி ராசிக்கு மாறுவார். பொதுவாக கிரகங்களின் ராசி மற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும். இந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1 /5

சூரியன் மேஷ ராசியில் ஐந்தாம் வீட்டில் நுழையவுள்ளார். சூரியனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 

2 /5

சூரியன் மிதுன ராசியில் மூன்றாவது வீட்டில் கோச்சாரம் ஆகவுள்ளார். சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

3 /5

கடக ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியனின் ராசி மாற்றம் நிகழவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

4 /5

துலாம் ராசிக்கு 11ம் வீட்டில் சூரியன் மாறுவார். இந்தப் ராசி மாற்றத்தின் விளைவால் நீங்கள் மரியாதையும் மதிப்பும் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தின் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

5 /5

மீன ராசிக்காரர்களின் ஆறாம் வீட்டில் சூரியனின் கோச்சாரம் நடக்கவுள்ளது. இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து காத்திருந்த நல்ல செய்தி உங்களை வந்தடையும்.