Sani Nakchatra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் முக்கியமான கிரகம் ஆவார்.
Sani Nakchatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. நல்ல செயலில் ஈடுபடுபவர்களுக்கு சனி பகவான் பல வித நன்மைகளை செய்கிறார். அவரது அருள் இருந்தால், வாழ்க்கையில் தொல்லைகள் நீங்கி அனைத்து வித இன்பங்களையும் காணலாம். சனி ஏப்ரல் 6 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இதனால் அனைவரது வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிக முக்கியமான கிராமமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் சனிபகவான் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது. .
சனியின் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்து மாற்றங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. சனி ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை சுமார் 03:55 மணிக்கு குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளின் வாழ்வில் சுபிட்சம் பெருகும். பல வித நன்மைகள் நடக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
கன்னி: கன்னி ராசிக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
விருச்சிகம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் சாதகமான பல விஷயங்கள் நடக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். இவற்றால் எதிர்காலத்தின் சாதகமான பலன்கள் கிடைக்கும். சனியின் அருளால் நிதி ஆதாயம் கூடும். புதிய நிதி ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்: சனி நட்சத்திர பெயர்ச்சி காரணமாக கும்ப ராசியினரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக பொருளாதார பிரச்சனைகள் தீரும். தாம்பத்திய வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும். கணவன் மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
சனி பகவானை மகிழ்விக்க நாம் சனிக்கிழமைகளில் சனி கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம். இது மட்டுமின்றி, ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்க்கும் நம்மால் இயன்றவரை உதவி செய்தால் அவர் மகிழ்ச்சி அடைவார்.
சனி பகவானின் அருள் பெற இந்த மந்திரத்தை தினமும் கூறி வரலாம்: “நீலாஞ்சன சமாபாசம், ரவிபுத்ரம் யமாக்ராஜம் சஹாயா மார்தாண்ட சம்பூதம், தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்”
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.