Lifestyle News Tamil : திருமண உறவை மீறிய காதல் மீது திருமணமான ஆண்களுக்கு அதிக ஆசை இருப்பதாக பிரபல டேட்டிங் செயலி நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Extramarital affairs, Lifestyle News Tamil : திருமணத்துக்கு மீறிய உறவு குறித்து டேட்டிங் செயலி நடத்திய ஆய்வில் ஆண்கள் அதிகமானோர் மனைவியைக் காட்டிலும் பிறர் மனைவியுடன் அல்லது பெண்களுடன் இருப்பதை அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் திருமண உறவு புனிதமாக கருதப்படும் நிலையில், அண்மைக்காலமாக இந்த உறவுகள் கடும் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. மாறிவரும் கலாச்சாரம் எல்லாம் திருமண உறவை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.
இந்தியாவில் இப்போது டிஜிட்டல் யுகத்தின் வீச்சு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இது திருமண உறவுகளில் எத்தகைய தாக்கத்தைஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து எக்ஸ்ட்ரா மேரிட்டல் டேட்டிங் ஆப் Gleeden ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது.
அந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியிருக்கிறது. Gleeden செயலி நடத்திய ஆய்வில் 46 விழுக்காடு திருமணமான ஆண்கள் திருமண உறவை மீறிய காதலில் ஈடுபட விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளது.
வேறொருவரின் மனைவி அல்லது திருமணமாகாத பெண்கள் ஆகியோருடன் உறவில் இருக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. வெறுமனே உடல் தேவைக்காக மட்டும் அல்லாமல் உணர்ச்சி, ஆதரவு ஆகியவைக்காகவும் இன்னொரு பெண்ணின் உறவை ஆண்கள் விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
டையர் 1, டையர் 2 நகரங்களில் இருக்கும் ஆண்களிடையே இத்தகைய போக்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கும் Gleeden ஆய்வு, 25 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்களிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் கிடைத்திருக்கிறது.
சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் கூட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அதிகமாக திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆண்களின் திருமணத்தை மீறிய உறவுக்கான பாதையாக வெர்ச்சுவல் ரியாலிட்டியும் இருக்கிறது. அதேபோல் பெண்களும் திருமணத்தை மீறிய உறவில் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
பெண்கள் அதிகமாக வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் தங்களின் திருமணத்தை மீறிய உறவை தொடர்வதாகவும் Gleeden டேட்டிங் செயலி தெரிவித்துள்ளது. 33 முதல் 35 சதவீதம் பெண்கள் தங்கள் துணையை தவிர வேறொரு ஆணுடன் இருப்பதைப் போல் கனவு காண்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களின் ஆண்கள் பெண்கள் பலரும் வேறொருவரின் துணையுடன் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஆய்வு மிக சொற்ப அளவில் மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் 2 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 35 சதவீத ஆண்களும், 33 சதவீத பெண்களும் தாங்கள் வேறொருவருடன் உறவில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக Gleeden ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும் இந்த ஆய்வின் முடிவுகளை பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியை கொடுப்பதாகவே இருக்கிறது.