விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்தான முடிவை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கவுதம் கம்பீர்.
பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சொதப்பினர். கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தானாக முன் வந்து விலகி கொண்டார்.
எந்த ஒரு வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் 2 பெரும் கடினமான வீரர்கள். பல சாதனைகளை செய்துள்ளனர். அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் நலன்களுக்காக திட்டமிடுவார்கள்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது, நான் எனது ஓய்வு பற்றி யோசிக்கவில்லை என்றும், இந்த போட்டியில் இருந்து மட்டும் தான் விலகி உள்ளேன் என்றும் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில், அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.