சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?

Sankatahara Chaturthi, சங்கடஹர சதுர்த்தி : மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால், விநாயகர் பெருமான் கேட்ட வரங்களை கொடுப்பார்

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி ஜூலை 24 ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், அந்த நாளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

1 /8

மாதந்தோறும் வரும் சங்கடஹர சதூர்த்தி விநாயகர் பெருமானை வழிபட உகந்த நாள். சவால்களை சமாளித்து வாழ்வில் செழிப்பைக் கொண்டுவர இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.

2 /8

இந்தமாத சங்கடஹர சதூர்த்தி ஜூலை 24 ஆம் தேதி வருகிறது. இது ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் 4 வது நாளில் கொண்டாடப்படுகிறது.   

3 /8

இந்த நாளில் பக்தர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, விநாயகப் பெருமானுக்கு பலிபீடம் அமைக்கின்றனர். அதில் விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலை வைத்து மலர்களால் அலங்கரிக்கப்படும். 

4 /8

அத்துடன் விநாயகருக்கு பிடித்த சாதம் உள்ளிட்டவையும் படையலாக படைக்கப்படும். அப்போது விநாயக பெருமானுக்கே உரிய மந்திரங்கள் சொல்லி அர்ச்சனைகள் எல்லாம் செய்யப்படும். 

5 /8

பக்தர்கள் பலர் இந்நாளில் விரதம் இருக்கிறார்கள். பூஜை முடித்தும் விரதம் கைவிடப்படும். அப்படி செய்தால் சிரமங்களைச் சமாளிக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கும் விநாயகர் அருள் பாலிப்பார் என நம்பிக்கை.   

6 /8

சங்கடஹர சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் அடிக்கடி சல்லடை மூலம் சந்திரனைப் பார்த்து, தடைகளை நீக்கி, தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற விநாயகர் உதவ வேண்டும் எனவும் வேண்டுதல் வைப்பார்கள்.

7 /8

மற்ற நாட்களைக் காட்டிலும் சங்கடஹர சதூர்த்தி நாளில் விநாயகரை வழிபடும்போது ஞானம், செழிப்பு ஆகியவற்றை விநாயகர் கொடுப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. 

8 /8

ஏதேனும் தடைகள் இருந்தால், தொழிலில் பிரச்சனை இருந்தால், தொடர் சிக்கல்களை எதிர்கொண்டால் தொடர்ச்சியாக விநாயகரை சங்கடஹர நாளில் விரதம்இருந்து வணங்கி வந்தால் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் விலகி, மகிழ்ச்சியான தீர்வுகள் கிடைக்கும்.