ஹர்திக் பாண்டியா 125 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 10 அரை சதங்களுடன் 2,344 ரன்கள் அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் 2024 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சர்ச்சைகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. கேப்டன்சியை மாற்றியதில் தொடங்கிய சர்ச்சை, தொடர் முழுவதும் அவர்களுக்கு பிரச்சனையாக அமைந்தது.
ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை அணி நியமித்தது. ஆனாலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தான் பிடித்தது எம்ஐ.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தக்க வைத்து கொள்ளுமா? அல்லது வெளியேற்றுமா என்ற கேள்வி அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் ஹர்திக் பாண்டியாவின் ஐபிஎல் கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது. ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக 33 போட்டிகளில் 22 வெற்றிகளை பெற்றுள்ளார்.
முதல் ஆண்டே அணிக்கு கோப்பையை பெற்று தந்தார், அடுத்த ஆண்டு பைனலுக்கு அழைத்து சென்றார். மேலும் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்திக் பாண்டியா.
டி20 உலக கோப்பை 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக ஹர்திக் இருப்பதால் அவருக்கு மும்பை அணி இன்னும் வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.