Lemon Juice Side Effects : எலுமிச்சை ஜூஸூடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும் என்பதால், அவை எந்ததெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lemon Juice Side Effects Tamil : எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்களுடன், அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பதால் ஆரோக்கியத்துக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
ஆனாலும், அதனை சில உணவுகளுடன் எப்போது சேர்த்து சாப்பிடக்கூடாது. அதனால் உடல்நலமும் பாதிக்கப்படும். எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை ஒரு அமில உணவு. இது அமில பண்புகளை கொண்டுள்ளது என்பதால் சில உணவுகளை இதுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஒருவேளை தெரியாமல் சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
ஏற்கனவே கூறியதுபோல் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளதால், பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற எந்த பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. லாக்டிக் அமிலக் கூறுகளைக் கொண்ட தயிர், எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், அமிலத்தன்மை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக மசாலாவுடன் தொடர்புடைய உணவுகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இறைச்சி உணவுகளை சாப்பிட்டும்போது எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், தர்பூசணி, நன்கு பழுத்த ஸ்ட்ராபெர்ரி சாப்பிடும்போது எலுமிச்சை சாறை அவற்றுடன் கலக்கக்கூடாது. இது வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எலுமிச்சை சாறு மோர் கூட சேர்க்க கூடாது. எப்படி எலுமிச்சம் பழச்சாற்றை பாலிலும் தயிரிலும் கலக்க முடியாதோ, அதுபோல மோரில் கலக்கக்கூடாது. இது செரிமானத்திற்கு நல்லதல்ல.
முட்டையுடன் எலுமிச்சை சாறு கலக்கக்கூடாது. எலுமிச்சை சாறு முட்டை புரதத்தை கரைக்கிறது. இது முட்டையின் தன்மையையும் கெடுத்துவிடும். எனவே, முட்டைகள் கொண்ட உணவுகளில் எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படக்கூடாது.