Flipkart Big Saving Days Sale 2022 Smart TV Offers Last Day: ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பெரிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்புகிறார்கள், ஆனால் பட்ஜெட் காரணமாக மக்களால் வாங்க முடிவதில்லை. அதன்படி மலிவு விலையில் ஐந்து சிறந்த ஸ்மார்ட் டிவி டீல்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். இந்த புதிய டீல் மூலம் பாதி விலையில் ஸ்மார்ட் டிவியை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த சலுகைகள் Flipkart Big Saving Days Sale இல் கிடைக்கும். இந்த சலுகையை பற்றி விரிவாக பார்ப்போம்.
55 இன்ச் 4கே டிஸ்ப்ளே கொண்ட இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.76,900க்கு பதிலாக ரூ.51,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி தள்ளுபடி ரூ.1,250 கிடைக்கும், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், நீங்கள் மேலும் 17 ஆயிரத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் ரூ.76,900 மதிப்புள்ள டிவியை ரூ.33,740க்கு வாங்க முடியும்.
எம்.ஐ இன் இந்த ஸ்மார்ட் டிவி 50 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 41,999க்கு பதிலாக 29,990 ரூபாய்க்கு பிளிப்கார்ட்டின் விற்பனையில் இருந்து வாங்கலாம். நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.20,400 அதிகமாகச் சேமிக்க முடியும். இந்த எம்.ஐ டிவியை ரூ.41,99க்கு பதிலாக ரூ.8,340க்கு எடுத்துச் செல்லலாம்.
எல்ஜியின் 40,990 ரூபாய் மதிப்பிலான இந்த ஸ்மார்ட் டிவி 43 இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நீங்கள் இதை ரூ.29,990க்கு வாங்கலாம் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,250 வரை சேமிக்கலாம். பழைய டிவிக்கு பதிலாக இதை வாங்கினால் மேலும் 11 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவியின் விலை ரூ.40,990க்கு பதிலாக ரூ.17,740 ஆக இருக்கலாம்.
40 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த சிறந்த ஸ்மார்ட் டிவி ரூ.26,990க்கு பதிலாக ரூ.15,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 1,250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் 11 ஆயிரம் ரூபாயைச் சேமிக்க முடியும். இதன் மூலம், இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.3,749க்கு பெற முடியும்.
தாம்சனின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.10,999க்கு விற்கப்படுகிறது, அதன் ஒரிஜினல் விலை ரூ.14,499 ஆகும். இதில் வழ்ங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.9 ஆயிரத்தையும், எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,100ஐயும் சேமிக்கலாம். அதன்படி இந்த டிவி ரூ.899க்கு மட்டுமே கிடைக்கும்.