Astro Predictions: வரும் பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகளில் மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். இதனால் இவர்களுக்கு பணத் தட்டுப்பாடே இருக்காது.
தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக, பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் பதினொன்றாம் வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆன்மீகப் பணிகளுக்காகவும் கொடுக்கலாம். சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். அதிலும் பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் குறையும். சந்திரன் ராசியில் குருவின் சுப அம்சம் காரணமாக, உங்கள் நிதி நிலைமை முன்பை விட மேம்படும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறப்பாக பணத்தை சேமிக்கவும் முடியும். சொந்தமாகத் தொழில் செய்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், பிப்ரவரி 15, 2023க்குப் பிறகு நல்ல லாபத்தைப் பெறலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். சூரியன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமான நிலையில் அமர்தால், இந்த மாதம் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பண பலன்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)