தந்தையர் தின ஸ்பெஷல்: மனதை உருக வைத்த அப்பா பாடல்கள்

Fathers Day Special Tamil Songs: தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம்.

Fathers Day Special Tamil Songs: உலகம் முழுவதும் இன்றைய தினத்தை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அப்பாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழுங்கள். இதனிடையே தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பல சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் உள்ளன. அதன் முழு விவரம் இதோ

1 /8

அபியும் நானும் படத்தில் வா வா என் தேவதை பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இப்பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.  

2 /8

தந்தைக்கு ஒரு மகளின் சிறப்பு என்ன என்பதை தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடல் சிறப்பாக சித்தரிக்கிறது.  

3 /8

டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் குறும்பா பாடல் தந்தை மகனுக்காக பாடும் பாடலாகும்.  

4 /8

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் பலர் நடித்துள்ளனர். இதில் இடம்பெற்றிருந்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் தந்தை மகன் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  

5 /8

இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அப்பன் மவனே வாடா பாடல் ஹிட் பாடலாகும்.  

6 /8

2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தெய்வத்திருமகள். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் பலர் நடித்திருந்த இந்த படத்தில் இருந்து ஆரீரோ ஆராரீரோ பாடல் சூப்பர் ஹிட் பாடலாகும்.  

7 /8

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என பலர் நடித்திருந்த திரைப்படம் டாடா. இதில் இடம்பெற்றிருந்த தாயாக நான் எனும் பாடல் தந்தை மக்கள் அன்பை வெளிப்படுத்துகிறது.    

8 /8

ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ரத்தமாரே. தந்தை மகன் உறவு குறித்து பேசும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.