வறுமையில் வாடும் பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரியுமா?

கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள். வறுமையில் வாடும் பலர் கிரிக்கெட் உலகில் நுழைந்தவுடன் பணக்காரர்களாக மாறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிரபல வீரர்கள் வறுமையின் பிடியில் இருப்பது தெரியுமா? வறுமையில் வாடும் 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது...

1 /5

மேத்யூ சின்க்ளேர் நியூசிலாந்தில் பிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 2013ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவரது குடும்பம் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. இப்போது சின்க்ளேர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

2 /5

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, கிறிஸ் செய்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகு லாரி டிரைவராகவும், கிளீனராகவும் வேலைகளைச் செய்யத் தொடங்கினார். 

3 /5

அர்ஷத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். 58 ஒருநாள் மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அர்ஷத் கான், ஓய்வு பெற்ற பிறகு, டாக்ஸி டிரைவராக பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

4 /5

இங்கிலாந்துக்காக விளையாடிய ஆடம் ஹோலியோக், சிறந்த ஆல்ரவுண்டர் என்று பெயர் வாங்கியவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். நிறுவனங்களில் வேலை செய்து குடும்பத்தை நடத்தினார்.

5 /5

இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரரும் இடம்பெற்றுள்ளார்.  கிரிக்கெட் வாழ்க்கையை 1934 இல் தொடங்கிய ஜனார்தன் நவ்லே, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து செப்டம்பர் 7, 1979 இல் இறந்தார்.