இளம் வயதில் இறந்த பிரபல நட்சத்திரங்ககளின் சோகமான மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள், ரசிகர் மனதில் என்றென்றும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள்.
பிரபல நடிகைகளான சில்க் ஸ்மிதா, ஷோபா, சின்னத்திரை சித்ரா, திவ்ய பாரதி, ஸ்மிதா பாட்டீல் மற்றும் பல பிரபல நடிகைகள் இளம் வயதிலேயே உயிர் துறந்துள்ளனர்.
Also Read | #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?
தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த ஸ்மிதா வாழ்க்கையில் ஏன் தோற்றுப்போனார்? வாழும்போது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த சில்க் சுமிதா என்ன சோகத்தில் இறந்தார்? அவரது மரணம், கொலை என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய கதாநாயகிகளைவிட அதிக சம்பளம் வாங்கிய சில்க் ஸ்மிதாவை, இன்றுவரை தமிழ் சினிமா கொண்டாடுகிறது.
தொலைகாட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டே பெரியத்திரையிலும் கால்தடம் பதித்த சித்ரா, திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். கணவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சித்ராவின் மரணம், கொலையா, தற்கொலையா என்பது இன்னும் தெரியவில்லை...
'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகி, 'பசி ' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷோபா, பிரபலமாக இருக்கும் போதே இறந்துவிட்டார்
19 வயதில் மர்மமான முறையில் இறந்தார் திவ்யபாரதி. 1993 இல் மும்பையில் உள்ள தனது ஐந்தாவது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து இறந்தார். தலையில் பலத்த காயம் மற்றும் உடலின் உட்புறத்தில் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக திவ்ய பாரதி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது
ஸ்மிதா பாட்டீல் 31வது வயதில் பிரசவத்தில் இறந்தார். இந்தி, பெங்காலி, கன்னடம், மராத்தி, மலையாளம் உட்பட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்மிதா, பத்மஸ்ரீ விருது மற்றும் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.