Face Wash Tips: எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையில் இருந்து முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
தினசரி காலையிலும், மாலையிலும் முகத்தை நல்ல ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, சுத்தமான சருமம் கிடைக்கும்.
வீட்டை விட்டு வெளியில் சென்றாலும், இல்லை என்றாலும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். நாள் முழுவதும் வெளியில் செல்பவர்கள் அடிக்கடி முகத்தை ககழுவி கொள்வது நல்லது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இரவில் தூங்கும் முன்பு முகத்தை சுத்தம் செய்வது வயதான தோற்றத்தை அகற்றவும். பகலில் சுத்தம் செய்வது இறந்த சரும செல்களை நீக்குகிறது.
முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வது வியர்வை சுரப்பிகளை நீக்க உதவும். எனவே எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யலாம்.
அதிக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் மூன்று முதல் ஐந்து முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி இல்லை என்றாலும், காலை மற்றும் மாலையில் முகத்தை கழுவலாம்.
பெண்கள் முகத்திற்கு மேக்கப் பயன்படுத்தி இருந்தால், இரவு தூங்கும் முன்பு நன்கு சுத்தம் செய்ய ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். மேக்கப் போட்ட பிறகு அலட்சியப்படுத்தினால் முகப்பரு ஏற்படும்.