ராசி மாறுகிறார் சனி: புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு ஏழரை சனி ஆரம்பம், பரிகாரங்கள் இதோ

Saturn Transit in January 2023: சனி பகவானை போல கொடுப்பவரும் யாரும் இல்லை, கெடுப்பவரும் யாரும் இல்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாக போற்றப்படுகிறார்.  நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். 

சனி பகவான் தற்போது மகர ராசியில் உள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி அவர் கும்ப ராசியில் பிரவேசிப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். 

1 /4

சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:2 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த சஞ்சாரத்தால் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் நீங்கும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.   

2 /4

சனியின் ராசி மாற்றத்துக்குப் பிறகு, மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இதனுடன் மகரம் மற்றும் கும்ப ராசியிலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும். முதல் மட்டும் இரண்டாம் கட்ட ஏழரை சனியில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள வெண்டி இருக்கும்.

3 /4

சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். 

4 /4

தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார். தொழுநோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களின் நலனுக்காக வேலை செய்வது போன்றவை சனிபகவானின் மஹாதசை பலன்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.