Garlic: அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகும் பூண்டு; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சமைக்கும் போது உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.  பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.

 

1 /5

பச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பச்சை பூண்டை சாப்பிடுவதால், மூளையில் உள்ள முக்கோண நரம்பு தூண்டப்பட்டு, மூளைக்கு வலிக்கான சிக்னலை அனுப்பும் ந்யுரோபெப்டிடு அளவை அதிகரிக்கிறது. இது மூளையை  மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.   

2 /5

பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானது.  

3 /5

பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

4 /5

பூண்டில் உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்கள் உள்ளது. குறிப்பாக, அதிக சல்பர் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

5 /5

அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், சருமத்தில் தடிப்பை  ஏற்படுத்தக் கூடியதாகும்.