Rolls Royce Spectre: ரோல்ஸ்ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் கார் ஸ்பெட்டர் அறிமுகமானது

Electric Car From Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸ் தனது முதல் முழு மின்சார கார் 'ஸ்பெக்டரை' வெளியிட்டது. 2023ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கார்கள் சாலையில் ஓடத்தொடங்கும்.

 

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்டர் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், புதிய காரின் விலையானது, நிறுவனத்தின் குல்லினன் மற்றும் பாண்டம் கார்களுக்கு இடையில் இருக்கும் என்று பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஆதார் கார்ட், டிரைவிங் லைசன்ஸை வாட்ஸ் அப்பில் சேமிப்பது எப்படி?

1 /7

ரோல்ஸ் ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் காரில் மிகப் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது,இரவில் மென்மையான வெளிச்சத்திற்காக 22 LED ப்பொருத்தப்பட்டுள்ளது. (புகைப்படம்: AFP)

2 /7

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஆனது ஆடம்பரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது  (புகைப்படம்: AFP)

3 /7

ஸ்பெக்டர் 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணிக்கும்  . (புகைப்படம்: AFP)

4 /7

320 மைல்கள்/520 கிமீகள் என ஸ்பெக்டர் அனைத்து மின்சார வரம்பையும் கொண்டிருக்கும் என்று WLTP சோதனையின் ஆரம்ப தரவு காட்டுகிறது. (புகைப்படம்: AFP)

5 /7

ஸ்பெக்டர் ஒரு 2-கதவு, 4-சீட்டர் கார் மற்றும் 3210 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும். கார் சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது, ஆற்றல், முடுக்கம் மற்றும் வரம்பு தொடபான புள்ளிவிவரங்கள் இன்னும் முழுவதுமாக வெளியாகவில்லை.

6 /7

காரின் மொத்த ஆற்றல் வெளியீடு மற்றும் பேட்டரியின் அளவு இறுதி செய்யப்படவில்லை, ஸ்பெக்டர் சுமார் 585 ஹெச்பி மற்றும் 900 என்எம் டார்க்கிற்கு ஏற்றதாக இருக்கும் என்று நிறுவனம் கோடிட்டு காட்டியுள்ளது.

7 /7

ஸ்பெக்டர் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்பிரிட் என்ற ஆடம்பர டிஜிட்டல் கட்டமைப்பைப் பெறுகிறது, இது மிகச்சிறந்த ரோல்ஸ் ராய்ஸ் பாணியில் வழங்கப்படுகிறது.