Effects of Mercury Transit: வாழ்க்கையில் அனைத்து அத்தியாவசியமான விஷயங்களையும் மனதில் திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் கிரகம் புதன். அதீத அறிவு, செயல்திறன் என வெற்றி பெறும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க புதன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவர்கள் நல்லவர்களாக இருப்பது மட்டுமல்ல, தொழில் மற்றும் பணியிடத்தில் வெற்றி பெற்றவராக இருப்பார்கள்.
ராகு/கேது மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றுடன் புதன் இணைவதற்கான சூழ்நிலையும் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரும்? தெரிந்துக் கொள்வோம்
மீன ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியான புதன் பதினொன்றாம் வீட்டில் அமர்கிறார்.எனவே இந்த பெயர்ச்சியால், மீன ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். நல்ல வளர்ச்சியும் நேர்மறையான நிகழ்வுகளும் இருக்கலாம். மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் போது உங்களது ஆசைகள் மற்றும் இலக்குகளை நிறைவேற்ற முடியும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு பரம்பரை வழி சொத்து கிடைக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் கவலைகளைத் தரும். பாதுகாப்பற்ற உணர்வுகள் எழலாம், முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம்
மகர ராசிக்காரர்களுக்கு, புதன் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதி மற்றும் முதல் வீட்டிற்கு செல்வதால், ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். மகர ராசியில் இந்த புதன் பெயர்ச்சியின் போது அதிர்ஷ்டம் வீட்டு கதவைத் தட்டும். நல்ல பாடங்களை கற்றுக் கொள்வீர்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகி, இரண்டாம் வீட்டில் அமர்கிறார். மனதில் திருப்ப்தி இருக்காது. வாழ்க்கை துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் ஏற்படும் இன்னல்கள், கவலையை தரலாம். இல்லற வாழ்வு இனிக்காது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, புதனின் பெயர்ச்சியால் கடின முயர்ச்சியால் தான் முன்னேற்றம் ஏற்படும். மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் போது பயணங்கள் அதிகரிக்கும்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான புதன் நான்காம் வீட்டில் இருக்கிறார்.வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், வீடு அலல்து சொத்து வாங்கவும், வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறவும் வாய்ப்புண்டு
கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் முதல் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். புதனின் பிப்ரவரி மாத பெயர்ச்சியால், உங்கள் மனம் மகிழ்ச்சி, கொண்டாட்டம் என திரும்பிவிடும். இது உங்களை வெற்றிப் பாதையில் இருந்து விலக்கிவிடலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதன் இரண்டாவது மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி ஆறாம் வீட்டில் இருக்கிறார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். தேவைப்படும் சமயங்களில் கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளும் கடின முயற்சிகள் நல்ல பலனைத் தரக்கூடும்.
கடக ராசிக்காரர்களுக்கு புதன் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகி ஏழாவது வீட்டில் இருக்கிறார். இந்த புதன் பெயர்ச்சி மிதமான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். ஆனால், மதிப்புமிக்க பொருட்களை இழக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
மிதுன ராசிக்காரர்களுக்கு முதல் மற்றும் நான்காம் வீட்டு அதிபதியான புதன் எட்டாம் வீட்டில் அமர்கிறார். இதனால், குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படும். தவறான புரிதலின் காரணமாக குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு, நிம்மதி குறையும். வாயை கட்டுப்படுத்துவது நல்லது
ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதன் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாகி, ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார். பொதுவாக, இது புதனின் ஆதிபத்தியம் பெற்றவர்களுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கலாம். மகர ராசியில் இந்த புதன் சஞ்சாரத்தின் போது, உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு, புதன் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாகவும், மகர ராசியில் இந்த புதன் சஞ்சாரத்தின் போது பத்தாவது வீட்டில் அமர்கிறார். மேற்கூறியவற்றின் காரணமாக, இந்தப் பயணத்தின் போது உங்கள் தொழிலைப் பொறுத்தமட்டில் நீங்கள் அபரிமிதமாகப் பெற முடியும். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கலாம்.