கண்களில் கருவளையம் நீங்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

சூரிய வெளிச்சம், வயதாவது, மரபு ரீதியில், அலர்ஜி அல்லது சோர்வு போன்றவற்றின் காரணமாக கண்களின் கீழ் கருவளையம் தோன்றி முக அழகையே கெடுத்து விடுகிறது.

1 /5

தினசரி போதுமான தூக்கம் அவசியம் அவசியம், சரியான உறக்கம் இருந்தால் தான் உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறும். சரியாக தூங்காவிட்டால் கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றும் அதனால் தினமும் நன்றாக உறங்க வேண்டும்.

2 /5

வைட்டமின்-ஏ நிறைந்த ரெட்டினாயிட் க்ரீம்களை பயன்படுத்துவது கருவளையத்தை போக்க உதவும். இந்த க்ரீம் கண்களுக்கு கீழே உள்ள கருமையை போக்குவது மட்டுமின்றி கண்களுக்கு கீழ் தோன்றும் சுருக்கங்களையும் போக்க செய்யும்.

3 /5

பாதாம் எண்ணெய் கண் கருவளையத்திற்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது, தினமும் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்து உங்கள் கண் கருவளையத்தில் தடவி வர கருவளையம் இல்லாமல் போய்விடும்.

4 /5

நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை தவிருங்கள், ஏனெனில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருந்தால் உங்கள் உடல் அதிகளவு மெலனினை உற்பத்தி செய்யும். இதனில் உங்களுக்கு கருவளையம் தோன்றும்.

5 /5

கண்களில் மேலே வெள்ளரிக்காய் வைப்பதனால் கண் கருவளையம் விரைவில் சரியாகும்.