உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதை சில அறிகுறிகள் முன் கூட்டியே தெரிவிக்கும். அதனை தெரிந்து கொண்டு செயல்படுவது உடலுக்கு நல்லது.
இளம் வயதினர் உட்பட பலருக்கும் இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு நவீன வாழ்க்கை முறை ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அசெளகரியமான உணர்வு: மார்பின் மையத்திலோ அல்லது இரு புறங்களிலோ கை முதுகு வரை ஒரு அசெளகரியமான உணர்வு ஏற்பட்டால் அது இதய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சு திணறல்: மூச்சுத் திணறல் இதே பிரச்சனையின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி ஆகும். இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆஸ்துமாவாக அல்லது சுவாச பிரச்சனையாக இருக்கலாம் என்று நீங்களே முடிவு எடுத்து விடக்கூடாது.
சீரற்ற இதயத்துடிப்பு: அரித்மியாஸ் எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு இதே பிரச்சினைக்கு மற்றொரு அறிகுறி ஆகும். அவ்வாறு நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
வீக்கம்: கால்களில் வீக்கம் கணுக்கால் அல்லது வயிறு வீக்கம் இதே செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம். அந்த சமயத்தில் ரத்த அழுத்தத்தை கண்காணிப்பது மிக மிக அவசியமாகும்.
சோர்வு: இயல்பான சோர்வுக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான சோர்வு மற்றொரு எச்சரிக்கையாகும்.