சண்ட முண்ட ரக்த பூஜனையும் அளித்த துர்க்கை சாமுண்டாவை போற்றும் துர்காஷ்டமி ஆயுதபூஜை!

Mahasthtami Saraswati Pooja : நவராத்திரியின் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை 'துர்காஷ்டமி' என்றும், மகாஷ்டமி, வீராஷ்டமி என்றும் அழைக்கிறோம். அசுர சக்திகளுடனான போரின் எட்டாவது நாளில், அன்னை துர்க்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றி, சண்டன், முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை அழித்த நாள் இது.

  • Oct 11, 2024, 10:27 AM IST

Weapons Worship In Ayudapuja : தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை அன்னை கீழ் இறக்கிய நாள் இன்று. அதனால் தான் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

 

1 /10

தீய சக்திகளை அழித்த இந்த துர்காஷ்டமி நாளில், துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பதால் சிறப்பான நாள் இது

2 /10

64 யோகினிகளுடன், பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி என அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்திருக்கும் நாள் ஆயுதபூஜை நாள்

3 /10

அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து அசுரசக்திகளை வதம் செய்த நாள் மகாஷ்டமி...

4 /10

சண்ட முண்ட ரக்த பூஜனையும் அளித்த பிறகு ஆதிசக்தி ஆயுதங்களை கீழே வைத்த நாள் இன்று... 

5 /10

அன்னையின் கையில் இருந்து கீழே வைத்தாலும் ஆயுதங்களின் உக்ரம் தணியவில்லை. எனவே, சக்தி வாய்ந்த ஆயுதங்களை சாந்திப்படுத்த ஆயுதங்களுக்கு பூஜை செய்யப்பட்டது 

6 /10

சாந்தமடைந்த அன்னையின் அருள், அனைவருக்கும் கிடைக்க துர்கை அன்னையை போற்றி வணங்குவோம்

7 /10

இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்க்கைக்கு உதவும் கருவிகளுக்கு ஆயுதபூஜை செய்து அன்று அவற்றை பயன்படுத்தாமல் அன்னையிடம் சமர்ப்பிப்பது வழக்கம்

8 /10

அறியாமையைப் போக்கும் கருவிகளான புத்தகம், பேனா மற்றும் கல்விக்கான சாதனங்களை வைத்து சரஸ்வதி பூஜை செய்கிறோம்

9 /10

தொழில் செய்பவர்கள், தொழிலுக்கு உதவும் கருவிகளை வைத்து பூஜிக்கின்றனர்

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது