Summer Drinks : எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அதிகளவில் வெப்பம் அதிகரித்து இருக்கிறது. இதை சமாளிக்க, சில இயற்கை பானங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Summer Drinks : வெயிலில் வெளியே செல்லவே பயப்படும் அளவிற்கு, சூடாய் கொளுத்துகிறது வெப்பம். இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்திருந்தது. குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், இதை சமாளிக்க நாம் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இயற்கை பானங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?
இந்த வெயிலின் வெப்பத்தை சமாளிக்க சில இயற்கை பானங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போமா?
பழமாக சாப்பிடுவதற்கும், சாறாக சாப்பிடுவதற்கும் உகந்த உணவு பொருள், தர்பூசணி. இதில் இனிப்பு சேர்த்தும் சாப்பிடலாம், சேர்க்காமலும் சாப்பிடலாம்.
வெயிலை சமாளிப்பதற்கு இன்னொரு அருமையான ஜூஸ், கரும்பு சாறு. இதில் புதினா இலைகளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் கூட நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
உடல் எடை குறைப்பு, இருதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு போன்ற பல்வேறு நல்ல அம்சங்களை உடலுக்கு அளிக்கிறது, எலுமிச்சை சாறு.
தயிரை வைத்து செய்யக்கூடிய முக்கியமான பானம், லஸ்ஸி. வெளி மாநிலத்தில் இருந்து வந்ததுதான் என்றாலும், இதற்கு நம் ஊரில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
மூலிகைகள், பழங்கள் சேர்த்து ஊற வைத்து தண்ணீரை பருகலாம். இது, நம் உடலில் உள்ள பிணியை போக்குவதோடு மட்டுமன்றி வெயிலையும் சமாளிக்க உதவுகிறது.
வெயிலையும் இளநீரையும் பிரிக்கவே முடியாது. வெப்பத்தை சமாளிக்க சிறந்த பானங்களுள் ஒன்று, இளநீர்.
லோ பட்ஜெட்டில் வயிறு நிரம்பும் அளவிற்கு குடிக்க கூடிய பானம், மோர். இதனால் பசியையும் சமாளிக்கலாம், வெயிலையும் சமாளிக்கலாம்.