டோனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை பில்லியன் உயர்ந்துவிட்டதா...!

Donald Trump Net Worth: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக தேர்வாகி உள்ள டோனால்ட் டிரம்பின், மொத்த சொத்து விவரத்தை கேட்டால் பலரும் அதிர்ச்சி அடைவார்கள். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

டோனால்ட் டிரம்ப் (Donald Trump) ஏற்கெனவே 2016ஆம் ஆண்டில் அதிபராக தேர்வான நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையே 2020ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

1 /8

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டோனால்ட் டிரம்ப் (Donald Trump) தேர்வாகி உள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதாரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அந்த வகையில், டோனால்ட் டிரம்பின் மொத்த சொத்து மதிப்பு மதிப்பு குறித்து அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.   

2 /8

அவர் டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் (TMTG) என்ற சமூக வலைதள நிறுவனத்தை டோனால்ட் டிரம்ப் நடத்தி வருகிறார். இதுதான் அவருக்கு பெருவாரியான செல்வத்தை குவிக்கும் தொழிலாக உள்ளது. அதேபோல் அவர் கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் முதல் சொகுசு ஹோட்டல்கள் வரை பல்வேறு ரியல் எஸ்டேட் தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார்.   

3 /8

அந்த வகையில், தற்போது TMTG நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஏற்றம் கண்டுள்ளதால் டோனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது. 57% TMTG பங்குகளை DJT என்ற பெயரில் டோனால்ட் டிரம்ப் தன்வசம் வைத்துள்ளார். இது தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது. இந்த பங்கின் விலை 11.7 அமெரிக்க டாலர் வரை வீழ்ச்சியும் கண்டுள்ளது, அதே நேரத்தில் 51.51 அமெரிக்க டாலர் என்ற நிலை வரை உயர்ந்தும் உள்ளது.   

4 /8

தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழில் (Donald Trump Real estate) மூலமாகவே தனது வாழ்க்கையை டிரம்ப் தொடங்கினார். இவர் புளோரிடாவில் Mar-a-Lago, மான்ஹாட்டனில் Trump Tower மற்றும் 1290 அமெரிக்க அவன்யூவில் 500 மில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புடைய சொத்துக்கள் என விலை உயர்ந்த சொத்துகளை தன்வசம் வைத்திருக்கிறார்.   

5 /8

அதே நேரத்தில் டிரம்ப் நேஷ்னல் டோரல் மியாமில் கோல்ஃப் ரெஸார்ட் இவரின் சொத்துக்களில் முக்கியமான ஒன்றாகும். இதன் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.   

6 /8

டோனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி மற்றும் NTFs ஆகியவற்றில் முதலீடு (Donald Trump Investment) செய்திருப்பதை கடந்தாண்டு பொதுவெளியில் அறிவித்தார். டிஜிட்டல் சொத்துக்கள் மட்டும் டிரம்பிடம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதாக கூறப்படுகிறது.   

7 /8

Letters To Trump என்ற அவரின் புத்தகம் 4.5 மில்லியன் அமெரிக்க டாலரை ராயல்டியாக குவித்தது. அவரின் பல்வேறு புத்தகங்களும் செல்வத்தை குவித்து வருகின்றன. (Donald Trump Book Royalty)  

8 /8

இந்நிலையில், தற்போது TMTG நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டிருப்பதன் மூலம், ரியல் எஸ்டேட், டிஜிட்டல் சொத்துக்கள், ராயல்டி மற்றும் முதலீடுகள் ஆகியவற்றையும் சேர்த்து அவரது சொத்து மதிப்பு (Donald Trump Net Worth) 5.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது 2.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.