உலகில் பல வகையான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், மக்கள் இன்னும் அவற்றை நம்புகிறார்கள். மக்களை அச்சமூட்டும் உலகின் சில வினோதமான மூடநம்பிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி. உலகில் பல்வேறு வகையான மக்கள் இருக்கிறார்கள். சிலருக்கு எதன் மேலும் நம்பிக்கை இருக்காது. அவநம்பிக்கையை பிறர் மீது வைத்தாலும் தன்னம்பிக்கையால் தலை உயர்ந்தவர்களின் பட்டியல் சிறியதாக இருக்கலாம். ஆனால், பலர் மீது நம்பிக்கை வைக்கும் பலர், தேவையில்லாத பல நம்பிக்கைகளை காரணம் இல்லாமல் நம்புகின்றனர். அவற்றில் பல மூடநம்பிக்கைகளாய் இருக்கும். வெளியில் செல்லும்போது, பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்று நினைப்பது முதல் தவறான மனிதர்களை நம்பி, பொருளையும், வாழ்க்கையையும் இழப்பது என்று தவறான நம்பிக்கைக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் உலகின் சில மூடநம்பிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இது ஆச்சரியத்தை மட்டுமல்ல, திகைப்பையும் ஏற்படுத்தும்.
Also Read | Instagramஇல் விராட்டை விரட்டி மாஸ் காட்டும் MS Dhoni
அன்னப்பறவையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த பறவை அபசகுனப் பறவையாம்! யூரேசிய வ்ரைனெக் (Eurasian Wryneck) உலகின் மிக மோசமான பறவை என்ற பட்டத்தை பெற்றுள்ளது. ஐரோப்பிய மக்களுக்கு இந்த பறவையின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி! மக்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தப் பறவை, எந்த திசையிலும் தலையை திருப்புகிறது. யூரேசிய ரைனெக், தனது தலையை திரும்பிப் பார்த்தால், அந்தப் பறவையின் கண்ணின் பட்ட மனிதர் விரைவில் இறந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டில், கேமரா பற்றி மக்கள் மத்தியில் நிறைய மூடநம்பிக்கைகளும் பயமும் இருந்தது. ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டால், அவரது ஆயுள் குறைந்துவிடும் என்று நம்பப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், மக்கள் கேமராவைப் பார்த்தால் பயப்படுவார்கள் என்பதால், பலர் கேமராவைப் பார்த்தால் ஓட்டம் பிடித்துவிடுவார்களாம்.
ஓபல் (Opal Stone) ரத்தினக் கற்களில் ஒன்று. அதை அணிந்ததால் கெட்டகாலம் தொடங்கிவிடும் என்ற அச்சம் நிலவியது. இதுவும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கை தான். இருப்பினும், பல இடங்களில் ஓபல் கல் மிகவும் அதிர்ஷ்டமானது என்று கருதப்படுகிறது.
கண்ணாடி பற்றி பெரிய மூடநம்பிக்கை: மக்கள் கேமரா மூலம் புகைப்படம் எடுக்க பயந்தது ஒரு காலம் என்றால், இன்றும் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஒரு மனிதனின் ஆன்மா கண்ணாடியில் சிறை வைக்கப்படுவதாக நம்புகின்றனர். இன்றும் பலர் கண்ணாடியைப் பார்ப்பதில்லை என்பது மூடநம்பிக்கையா இல்லையா? நீங்களே சொல்லுங்கள்….
பறவை வந்து மோதுவது அதிர்ஷ்டம்!! : நமது காரில் ஒரு பறவை வந்து மோதினால் அது அபசகுனம் என்று நினைக்காவிட்டாலும் அதை நினைத்து வருத்தப்படுவோம். ஆனால் ரஷ்யாவில், பறவைகள் வந்து மோதினால் அது அதிர்ஷ்டம் என்று மக்கள் கருதுகிறார்கள். பறவை உங்கள் மீதோ, உங்கள் வாகனத்தின் மீதோ மோதினால் பணம் வந்து கொட்டும் என்று நம்புகிறார்கள். பறவை வந்து மோதுவது மட்டுமல்ல, அதன் எச்சம் பட்டாலும் போதும், அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுமாம்....