உங்கள் சருமத்தை பதினைந்தே நிமிடத்தில் பளிங்கு போல ஜொலிக்க வைக்கும் கோல்டன் பீல் ஆஃப் மாஸ்க்!!!
அழகாக இருப்பதற்கும், சருமத்தை (Skin) கவனித்துக்கொள்வதற்கும் அதிக பணங்களை சலூன்களில் செலவிடுவதற்கு பதிலாக, வீட்டில் சில எளிய விஷயங்களைச் செய்யலாம் என்பதே ஆகும்.
இங்கே ஒரு சில DIY டிப்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இது நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், வீட்டில் ஒரு பார்லர் போன்ற பிரகாசத்தை உங்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது.
இதற்கு தேவையான பொருட்கள்: ஜெலட்டின் தூள் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் செய்முறை: > நீங்கள் முதலில் ஜெலட்டின் தூளை உருக்க வேண்டும். > அடுத்து, கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். > இதனோடு, நீங்கள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்கலாம். > அடுத்து, அதில் ஜெலட்டின் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். > உங்கள் ஃபேஸ் மாஸ்க் தயாராக உள்ளது. இப்போது அதை முகத்தில் தடவவும். இதனை தடவும் முன்பு முகம் ஈரப்பதத்தோடு இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். > இதை 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள், அது காய்ந்ததும், அதை உரித்து எடுக்கவும். > உங்கள் முகத்தை கழுவி, பின்னர் நன்கு ஈரப்பதமாக்குங்கள். உங்களுக்கு சென்சிடிவான தோல் இருந்தால், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, நீங்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளானால், ஜெலட்டின் பொடியைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
இந்த செயல்முறையை இரண்டு வாரத்திர்க்கு ஒரு முறை செய்தால் உங்கள் சருமத்தை பதினைந்தே நிமிடத்தில் பளிங்கு போல ஜொலிக்க வைக்கும்.