உங்கள் சக ஊழியரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத விஷயங்கள்!

நம்முடன் பணிபுரியும் சக ஊழியர்கள் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் நாம் அவர்களிடம் சில விஷயங்களை பற்றி எப்போதும் பேசக்கூடாது.

 

1 /5

உங்களுடன் பணிபுரியும் நபர்களிடம் ஒருபோதும் நிதி சம்மந்தமான உதவிகளை நாடாதீர்கள், எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளாக இருந்தாலும் சக ஊழியரிடம் எப்போதும் பணம் கேட்காதீர்கள்.  

2 /5

பணிபுரியும் இடத்தில சக ஊழியரிடம் மற்றவரை பற்றி வீண்பேச்சு பேசாதீர்கள், பேசும்போது உங்களுக்கு அது மகிழ்ச்சியானதாக தெரிந்தாலும் இறுதியில் அது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.  

3 /5

ஒருவர் அணிந்திருக்கும் ஆடை பற்றியோ அல்லது ஒருவரது உடலமைப்பு பற்றியோ உங்களுக்கு சில கருத்துக்கள் இருந்தால் அதை உங்கள் மனதிலேயே வைத்துக்கொள்ளுங்கள், இதனை பற்றி வெளியில் பேசாதீர்கள்.  

4 /5

பல ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒரு வேளையில் இருந்துகொண்டே மற்றொரு வேலையை தேட அல்லது மற்றொரு வேலைக்கு சேர்வது குறித்து ஆலோசிப்பது, இது உங்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.  

5 /5

உங்களுடன் பணிபுரிபவர் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி அவரிடம் உங்கள் தனிப்பட்ட உறவு சம்மந்தமான விஷயங்களை கூறாதீர்கள், ஏனெனில் அவர்கள் எப்போதுமே உங்களுக்கு நண்பர்களாக இருந்துவிட மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.