சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பிரஷர் குக்கர் மாறிவிட்டது. பிரஷர் குக்கரில் எளிதாக சமைத்து விடலாம். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையெல்லாம் சுலபமாக முடிந்து விடும்.
பிரஷர் குக்கரில் சமைத்தால் நேரத்தை மட்டுமல்ல சமையல் எரிவாயுவையும் இது மிச்சப்படுத்தும். ஆனால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள் உள்ளன.
வறுத்த உணவுகள் குக்கரில் உணவுப் பொருள்களை வேக வைக்கலாமே தவிர வறுக்கவோ பொறிக்கவோ கூடாது.
பாஸ்தா நூடுல்ஸ் பாஸ்தா போன்ற ஃபாஸ்ட் உணவுகளை குக்கரில் வேக வைப்பது நல்லது இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
பால் பொருட்கள் பால், தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட உணவுகளை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் சமைத்தால் அதன் அழுத்தம் பால் பொருள்களின் தன்மை மற்றும் சுவையை அழிக்கக்கூடும்.
கீரைகள் இலை, கீரைகள் போன்ற சாதுவாக இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். குக்கரில் இருக்கும் அழுத்தம் மற்றும் வெப்பநிலை அதன் நிறங்களை ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும்.
கேக்குகள் கேக்குகள், குக்கிகள் போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் வைத்து பேக் செய்யக்கூடாது. பிரஷர் குக்கர் பேக்கிங்கான கருவி அல்ல.