ரயில் பயணிகளுக்கு செம ஜாக்பாட்.. தீபாவளி பரிசை அள்ளி வாங்கிய IRCTC

தீபாவளிக்கு முன்னதாக, IRCTC ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. முழுமையான தகவலுடன் டூர் பேக்கேஜின் விலை மற்றும் அட்டவணையை அறிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி விடுமுறை நெருங்கி வருவதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான சிறப்பு சுற்றுலா பேக்கேஜை IRCTC அறிவித்துள்ளது. இயற்கை அழகால் மக்களைக் கவரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைக் பார்வையிட வேண்டும் என்கிற உங்கள் விருப்பத்தை இந்த தீபாவளிக்கு IRCTC மூலம் நிறைவேற்றலாம், அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தில்.

1 /5

போர்ட் பிளேயரில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கும்: இந்த தீபாவளிக்கு நவம்பர் 6 முதல் நவம்பர் 24 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு 5 இரவு 6 நாள் பேக்கேஜை IRCTC அறிவித்துள்ளது. இந்தப் பயணம் போர்ட் பிளேயரில் இருந்து தொடங்கும். போர்ட் பிளேர், நைல் மற்றும் ஹேவ்லாக் ஆகியவை 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்ட இந்த பேக்கேஜில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

2 /5

சுற்றுப்பயண விவரங்கள்: கார்பின்ஸ் கோவ் பீச், செல்லுலார் ஜெயில், ராஸ் தீவு, நார்த் பே தீவு, ஹேவ்லாக் தீவு, புகழ்பெற்ற கலா பத்தர் கடற்கரை, ராதா நகர் கடற்கரை, நீல் தீவு, இயற்கை பாலம் லக்சம்பூர் கடற்கரை மற்றும் பரத்பூர் கடற்கரை போன்ற அழகிய சுற்றுலா இடங்கள் இந்த பயணத்திட்டத்தில் அடங்கும்.  

3 /5

பேக்கேஜ் கட்டணம்: 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான பேக்கேஜின் விலை மூன்று பேர்  தங்குவதற்கு ரூ.27,450 ஆகவும், இரண்டு பேர் தங்குவதற்கு ரூ.30,775 ஆகவும், ஒருவர் மட்டும் தனியாக தங்குவதற்கு பேக்கேஜின் விலை ரூ.52,750 ஆகவும் இருக்கும். 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனி படுக்கையுடன் கூடிய பேக்கேஜ் ரூ. 17,000 ஆகவும், 2 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை இல்லாத பேக்கேஜ் ரூ 13,550 ஆகவும் இருக்கும்.  

4 /5

பேக்கேஜில் என்னென்ன அடங்கும்?: எல்லா இடங்களிலும் கூடுதல் மெத்தையுடன் கூடிய இரட்டை அல்லது மூன்று பகிர்வு ஏசி அறைகளில் தங்கும் வசதி, சுற்றுலாத் தலங்களுக்கான பயணத் திட்டம் மற்றும் நுழைவு அனுமதிகள், நுழைவுச் சீட்டுகள், படகுப் பயணச் சீட்டுகள், வனப் பகுதி அனுமதி, உணவு, அனைத்து வருகை மற்றும் புறப்படும் இடங்களிலும் உதவி, பிற குறிப்பிடப்பட்ட அனைத்து செலவுகள் மற்றும் அனைத்து போக்குவரத்து செலவுகள் மற்றும் சொகுசு வரி செலுத்துதல் ஆகியவை பேக்கேஜில் அடங்கும்.  

5 /5

பேக்கேஜில் என்ன இன்க்ளூட் செய்யப்படவில்லை?: டிப்ஸ், சலவை, தொலைபேசி பில், காப்பீடு, மதுபானம், அறை ரூம் சர்வீஸ், கேமரா கட்டணங்கள், ஹர்பல் மசாஜ் ஆகியவை இந்த பேக்கேஜில் சேர்க்கப்படவில்லை. இது தவிர, எலிஃபண்டா கடற்கரைக்குச் செல்வதற்கான விருப்பமும் இந்த பேக்கேஜில் சேர்க்கப்படவில்லை.