இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

New Movies in Tamil: நவம்பர் 24ம் தேதி தமிழ் மற்றும் பிற மொழிகளில் நிறைய படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகின்றன.

 

1 /6

Dhruva Natchathiram கௌதம் மேனனின் ஸ்பை த்ரில்லர் படமான துருவ நட்சத்திரம் இந்த வாரம் வெளியாகிறது.  விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.  

2 /6

Joe  ரியோ கதாநாயகனாக நடித்துள்ள ஜோ படம் இந்த வாரம் வெளியாகிறது.  ஏற்கனவே இந்த படத்தை பற்றி பாசிட்டிவ் டாக் இருப்பதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  

3 /6

80sBuildup  சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 80sBuildup.  குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

4 /6

Kuiko  விதார்த் மற்றும் யோகி பாபு நடித்துள்ள குய்கோ நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.  

5 /6

இது தவிர மம்முட்டி நடித்துள்ள காதல் தி கோர், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள சில நொடிகளில் ஆகிய படங்களும் திரையரங்கில் வெளியாக உள்ளது.    

6 /6

மேலும், ஓடிடியில் விஜய்யின் லியோ, ஆர்யா நடித்து தி வில்லேஜ், பிரேம் ஜியின் சத்திய சோதனை, சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.