Diet For Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய என்ன சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துக் கொண்டால் விரைவில் குணமாகலாம்.
டெங்கு காய்ச்சலில் இருந்து மீள்வதற்கு புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது. இவை இரத்த சோகையைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் படிக்க | வைட்டமின் சி குறைபாடு ஏற்படுத்தும் ஆபத்து! அலாரம் அடிக்கும் அலார்ட்
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் டெங்குவில் இருந்து மீள பெரிதும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது டெங்குவை தடுக்கும் அருமருந்து. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரஞ்சு பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கோடைக்காலத்தில் தாகத்தைத் தணிக்கும் இளநீர் டெங்குவில் இருந்தும் உங்களைக் காப்பாற்றும். டெங்கு காய்ச்சலின் போது உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் உடலை ஹைட்ரேட் செய்வது அவசியம். இதில் இளநீர் மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் நீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
மாதுளம்பழம் டெங்குவை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை பராமரிக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால், டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் மீள்வது மட்டுமல்லாமல், டெங்குவையும் தவிர்க்கலாம்.
டெங்கு நோயாளிகள் பப்பாளி இலைகள் மற்றும் விதைகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் வரத் தொடங்கியுள்ளன. பப்பாளி இலைகள் மற்றும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு இந்த டெங்க்கு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும், அவற்றை அரைத்தும் சாப்பிடலாம். இது இரத்த தட்டணுக்களை உருவாக்க உதவுகிறது.
கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கீரை சாப்பிடுவது டெங்குவை எதிர்த்துப் போராட உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.