டாட்டூ போட விருப்பமா? இந்த 5 பக்க விளைவுகள் ஏற்படலாம்! ஜாக்கிரதை!

தற்போது பலருக்கும் உடலில் டாட்டூ போட விருப்பம் உள்ளது. ஒரு சிலருக்கு டாட்டூ போடுவதால் உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 

1 /6

சிலருக்கு டாட்டூ போடும் போது பயன்படுத்தப்படும் பச்சை மை, சிவப்பு மை ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். இதனால் பச்சை குத்தப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும்.  

2 /6

டாட்டூ போடும் போது முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.    

3 /6

பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் வைரஸ் தொற்றுகள் முதல் பாக்டீரியா தொற்றுகள், வித்தியாசமான காசநோய், தொழுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  

4 /6

உடலில் சில இடங்களில் டாட்டூ  போடும் போது எரிச்சல் ஏற்படலாம். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் சரியான முடிவுகள் வராது.  

5 /6

அதிகமாக டாட்டூ  போடும் போது தோல் மெலிதல், தோலில் புண், வடுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் அழற்சி ஏற்படும் அபாயமும் உள்ளது.   

6 /6

டாட்டூ போடும் முன்பு நம்பகமான கடைகளை தேர்வு செய்வது நல்லது. டாட்டூ போடுவதற்கு முன்பு போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்து கொள்ள கூடாது.