Fig Fruit Eating Benefits in Tamil : பழங்களில் வைட்டமின் ஏ, சி, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மாங்கனீஸ் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழம். அத்தியை அப்படியே பழமாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம்.
Fig Fruit Eating Benefits in Tamil : உலரவைத்துப் பயன்படுத்தும் அத்திப்பழம், வெகுநாட்கள் வரை வைத்து சாப்பிட்டாலும், சத்துக்களை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்வதில்லை. இரத்தசோகை நோயை குணப்படுத்துவதில் அத்திப்பழத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்பது தெரியுமா?
அத்திமரத்தின் அனைத்து பாகங்களும் அற்புதமான மருத்துவ குணம் கொண்வை. அத்திப் பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. சித்த மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது அத்திப் பழம் என்றால், அமட்டுமல்லாமல், அத்திக்காய், அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மருந்துகளாகப் பயன்படுகிறது.
பித்தத்தினை சரி செய்வதில் அத்திப்பழம் ஆற்றல் மிக்கதாக செயல்படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கும் பண்புகள் கொண்ட அத்திப்பழம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதிலு வல்லது
பொதுவாக இரத்த குறைபாடு, ஹியூமோகுளோபின் பிரச்சனை என இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அத்தி நல்ல மருந்தாக பயன்படும் உணவுப்பொருளாகும்.
இரத்த விருத்திக்கு அத்தி மிகவும் நல்லது. இதிலுள்ள அற்புதமான பண்புகள், இரத்தத்தை உடலில் அதிகரிக்க வைத்து உடலில் சத்து குறைபாட்டை போக்குகிறது
தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டால் இரத்தசோகை என்ற பிரச்சனையே வராது. ஆனால், பழமாக அத்தி அதிகமாக கிடைக்காது என்பதால், உலர் அத்திப்பழத்தை உண்ணலாம்.
உலர் அத்திப்பழத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து, பழத்தையும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், உடலில் இரத்தம் உற்பத்தியாகும் செயல்முறை சீராகும்
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை