நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். சீரகம் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லது. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் எடையை பராமரிப்பதற்கும் , தேவையற்ற கொழுப்பு இழப்புக்கும் முக்கியமான ஒன்றாகும் சீரகம். எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும்.
சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் அல்லது உணவிற்கு முன் சீரக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற ஒன்றை சாப்பிடுவதை தடுக்கலாம். சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம்.
வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையுமே தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல கோளாறுகளை சரி செய்யும்.