மீண்டும் பதம் பார்க்கும் கொரோனா; குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

தொற்று நோய் பரவலால் வீட்டிலேயே இருக்கும் நிலையில், குழந்தைகளை கையாள்வது ஒரு சவாலான விஷயம் ஆக மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான் சவாலாக இருக்கிறது. அப்படி பெற்றோர்களாக இருப்பவர்கள் தங்களுடைய குழந்தைகளை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

1 /4

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமாக இருப்பது. கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிரிமிநாசினியை பயன்படுத்தியோ சுத்தம் செய்யுங்கள். 

2 /4

கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.  

3 /4

தும்மல் அல்லது இருமல் வந்தால், டிஷ்யு பேப்பரை பயன்படுத்துங்கள். 

4 /4

முடிந்த வரை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே கொண்டு சொல்வதை தவிர்க்கவும். இதன்மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்னை உள்ளவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.