Ram Janmabhoomi: ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் மும்முரம்

Construction of Ram Remple: ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பக்தர்களுக்கு பரவசத்தை தந்துள்ளது. ஆலயத்தின் கருவறை எப்படி இருக்கும் தெரியுமா?

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமானத்தின் சில படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்த அறக்கட்டளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், கருவறை மற்றும் பீடம் கட்டும் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகளின் புகைப்படம் நேற்று அதாவது 26 ஆகஸ்ட் 2022ம் நாளன்று வெளியானவை.  

மேலும் படிக்க |  வீடு திரும்பும் ஸ்ரீராமரை வரவேற்கும் அயோத்தியா

1 /6

ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலின் சில படங்களைப் பகிர்ந்துள்ளது. படங்களைப் பார்க்கும்போது கோயில் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடந்து வருவது தெரிகிறது

2 /6

பீடம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2023 முதல் ஸ்ரீ ராம் லல்லாவின் பெரிய கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்

3 /6

பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவிலின் கருவறையின் தற்போதைய நிலை குறித்த சில படங்கள் என்ற பெயரில் ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது

4 /6

கோவிலின் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 5 அன்று ட்வீட் செய்துள்ளது.  

5 /6

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கோவிலின் 40% பணிகள் முடிவடைந்துள்ளதாக அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் தரை தளத்தில் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

6 /6

கோவிலின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. கோவில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை