Conjuring Kannappan Movie Review: சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.
சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கான்ஜூரிங் கண்ணப்பன். இப்படம், காமெடி-பேய் த்ரில்லர் கதையை வைத்து உருவாகியுள்ளது. இதனை செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கியிருக்கிறார்.
கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கு ரசிகர்கள் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் சதீஷ்-விடிவி கணேஷ், ரெடின் கிங்க்ஸ்லி, நாசர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி ரசிகர்களை ரசிக்க வைப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கேம் டிசைனரான சதீஷ், சூனியம் வைக்கப்பட்ட ஒரு ரெக்கையை தொட்டதால் பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கிறார். அந்த கனவில் உயிர் பிரிந்தால் நிஜ உலகிலும் உயிர் பிரிந்து விடும் என்ற நிலை ஏற்படுகிறது.
ஹீரோ மட்டுமன்றி, அவரது குடும்பமே அந்த கனவிற்குள் சிக்கிக்கொள்கின்றது. பேயின் பிடியில் இருந்து தப்பினார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதை காமெடியுடன் சொல்ல முயற்சித்திருக்கின்றனர்.
படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் வர்க்-அவுட் ஆகியுள்ளதாகவும் பல இடங்களில் உச் கொட்ட வைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ரெஜினா தனக்கு கொடுத்த வேலையை கரெக்டாக செய்திருப்பதாகவும், அவர் இப்படத்தில் இல்லையென்றாலும் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் நல்ல காமெடி படம் பார்க்க விரும்பினால் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.