சனி - சூரியன் - சுக்கிரன் யுதி! பம்பர் பலன்களை பெறும் ‘சில’ ராசிகள்!

சனி - சூரியன் - சுக்கிரன் யுதி 2023: பிப்ரவரி 13 முதல், கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுள் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார், பிப்ரவரி 27 முதல், கிரகங்களின் அதிபதியான புதனும் அதே ராசியை அடைந்தார்.  சூரியன், சனியுடன் இப்போது புதனின் பிரவேசம்  மூலம், மூன்று கிரகங்களும் இணைகின்றன அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சனி - சூரியன் - சுக்கிரன் யுதி 2023: பிப்ரவரி 13 முதல், கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுள் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார், பிப்ரவரி 27 முதல், கிரகங்களின் அதிபதியான புதனும் அதே ராசியை அடைந்தார். இரண்டு கிரகங்களும் நட்புடன் உள்ளன. இது மரியாதை மற்றும் கௌரவத்துடன் பொருளாதார நன்மைகளையும் தருகிறது. சூரியன், சனியுடன் இப்போது புதனின் பிரவேசம்  மூலம், மூன்று கிரகங்களும் இணைகின்றன அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

1 /5

மேஷம் -  மேஷ ராசிகள் மனதில் அடக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும் நேரம் இது. ஆனால் எந்த வேலையிலும் அவசரப்பட வேண்டாம். வருமானம் வேகமாக உயரும். பணியாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறலாம்.  உயர்கல்வி பயிலும் மேஷ ராசி மாணவர்கள் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கு  பிறர் உதவி தேவைப்படும். 

2 /5

ரிஷபம்- ரிஷப ராசிகள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள். எனவே பணியிடத்தில் திருப்தி அடையாமல், புதிய வேலை தேடுபவர்கள், புதிய வேலைக்கான தேடலைத் துரிதப்படுத்த வேண்டும். வியாபாரிகளின் வியாபாரமும் நன்றாக நடக்கும், முன்னேற்றமும் ஏற்படும். சட்டவிரோத செயல்களைத் தவிர்க்கவும். வீட்டில் மனதிற்கு பிடித்த செடிகளை நட வேண்டும், மன அமைதி கிடைக்கும்.

3 /5

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் குறைந்த முயற்சியில் அதிக பலன்களைப் பெறுவார்கள். எல்லோரையும் நன்றாக நடத்துங்கள். ஊழியர்கள் கடின உழிப்பிற்கு ஏற்ற பலன்களை பெற்றுவார்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழல் இருக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். புதிய வேலையைத் தொடங்கும் முன், உங்கள் தந்தையின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

4 /5

துலாம் - துலாம் ராசிக்காரர்கள் மாமியார் தரப்பில் இருந்து மகிழ்ச்சியான செய்திய்யைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்திலும் உங்கள் மதிப்பு உயரும். ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் தானாக முடிவடையும். உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

5 /5

விருச்சிகம் -  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பொருளாதார நிலையும், பெரிய அளவில் சொத்து வாங்கும் வாய்ப்பும் இருக்கும். சொத்து வாங்குவதுடன், நீங்கள் எந்த நிலம் அல்லது வீடு வாங்கினாலும் அதில்க் வில்லங்கம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் முதலீடு வேகமாக வளரும். அத்தகைய சூழ்நிலையில், சேமிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். தாயின் உடல்நிலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எலும்பு சம்பந்தமான நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.